பெரம்பலூர்: நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - ரூ.2 லட்சம் பரிசு பெற வாய்ப்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வழங்கும் நம்மாழ்வார் விருதுக்கு நவம்பர் 15-க்குள் விண்ணப்பிக்கலாம். மாநில அளவில் 5 சிறந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.