திருப்பூர் தெற்கு: திருப்பூரில் ‘கருப்பு’ பட பாணியில் விநாயகர் சிலை: பொதுமக்கள் ஆர்வம்!
திருப்பூர் கேத்தம்பாளையம் மற்றும் பிச்சம்பாளையம் புதூர் பகுதிகளில், ‘கருப்பு’ திரைப்படத்தை மையமாகக் கொண்டு மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பு வடிவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அரிவாள், கதாயுதம் மற்றும் குதிரையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.