கோவை வடக்கு: கோவை பி.எம்.பி வசந்தம் நகர்: புதிய சாலையில் பெரிய பள்ளம் - பொதுமக்கள் அவதி!
கோவை வார்டு 1, பி.எம்.பி வசந்தம் நகரில் பாதாள சாக்கடை பணிகளுக்குப் பின் போடப்பட்ட தார் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விபத்தைத் தவிர்க்க செடிகளை வைத்து மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.