நல்லம்பள்ளி: தருமபுரி சோழவராயன் ஏரி ஆக்கிரமிப்பு: பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
தருமபுரி மாவட்டம் மாதேமங்கலம் சோழவராயன் ஏரியின் 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கோடி கால்வாயை மூடி பாதை அமைக்க முயன்ற பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் இந்த ஏரியைப் பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது.