திருவாடனை: ராமநாதபுரம்: மயானத்திற்கு பாதை இல்லாததால் வயல்கள் வழியாக உடலை சுமந்து செல்லும் அவலம்
ராமநாதபுரம் மாவட்டம் சேமனிவயல் கிராமத்தில் மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால், வயல்கள் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலநிலை நீடிக்கிறது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சாலை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.