விருத்தாசலம்: மத்திய பாஜக அரசு மற்றும் பாஜக எம்பியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
மத்திய பாஜக எம்பி அனந்தகுமார் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 400 எம்பிகளுக்கு மேல் ஜெயித்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக அகற்றி விடுவோம் என்று ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கு விரோதமாகவும் பேசியதாக கூறி மத்திய மோடி அரசையும்,அனந்தகுமார் எம்பியையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது