மதுரை கிழக்கு: மதுரை நேதாஜி சாலையில் உடைந்த பாதாள சாக்கடை: கழிவுநீரால் பொதுமக்கள் அச்சம்
மதுரை நேதாஜி சாலையில் பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் நுரை பொங்க வெளியேறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டாசு கழிவுகள் மற்றும் ரசாயனம் கலந்திருக்கலாம் என கருதப்படும் இந்த கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.