கீழ்வேளூர்: நாகை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்ம மரணம் - நகை பறிப்பிற்காக கொலையா?
நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் மேட்டுத் தெருவில், வீட்டில் தனியாக இருந்த கமலம்பாள் என்ற மூதாட்டி ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதணி காணாமல் போனதால் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.