கொல்லிமலை: கொல்லிமலையில் மாபெரும் தூய்மைப் பணி முகாம்: அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை
நாமக்கல் கொல்லிமலையில் 'நெகிழி இல்லாத தூய்மையான கொல்லிமலை' அமைக்கும் வகையில் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. வரும் அக்டோபர் 2 முதல் நாமக்கல் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.