திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: பணியின் போது உயிரிழந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய தலைமை காவலர் ராஜகுரு, பணியின் போது திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் சக காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.