விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கையாக ₹10 லட்சம் கிடைத்துள்ளது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நிரந்தர உண்டியல்கள் 9, தற்காலிக உண்டியல்கள் 4, திருப்பணி உண்டியல் 1 என மொத்தம் 14 உண்டியல்கள் திறக்கப்பட்டு, இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை எண்ணப்பட்டது. அதன்படி, உண்டியலில் 10 லட்சத்து 18 ரூபாய் ரொக்கம், 18 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கடலூர் உதவி ஆணையர் தலைமையிலும், செயல் அலுவலர் மாலா முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.