விருத்தாசலம்: விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலை ஆய்வு செய்த குழுவினர்; உழவாரப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் உத்தரவு
விருத்தாச்சலம் வருத்தகிரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்பொழுது கோவிலின் தற்போதைய நிலை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், தூய்மை பணிகள் மேற்கொள்வது ,சுற்றுப்புற சுவர்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுவது, சுவர்களில் படிந்துள்ள குங்குமம் விபூதி எண்ணெய் கரைகளை அகற்றி உழவாரப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.மேலும் உழவாரப் பணிகளை உடனடியாக முடிக்க இணை ஆணையர் பரணிதரன் உத்தரவு