அரியலூர்: மருதையாற்றில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்!
அரியலூர் மாவட்டம் வாரணவாசி ஊராட்சியில் மருதையாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.