பெரம்பலூர்: பெரம்பலூரில் முதல்வர் விஜயை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.