தரங்கம்பாடி: காழியப்பநல்லூர் ஊராட்சி கண்ணப்பன் மூளை பகுதியில் சட்ரஸ் பணியின் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சி கண்ணப்பன் மூளை பகுதியில் மகிமலையாற்றில் சட்ரஸ் நீர் ஒழுங்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி சுமர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பொறையார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.