ராசிபுரம்: வெண்ணந்தூர் விசைத்தறி தொழில் பாதிப்பு: தீபாவளி ஆர்டர்கள் இல்லாததால் உரிமையாளர்கள் தவிப்பு
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரிச்சுமை மற்றும் ஆர்டர்கள் இல்லாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். 5,000 விசைத்தறிகள் உள்ள நிலையில், தொழில் நலிவடைந்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.