பெரியகுளம்: தேனி வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி, வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் சுற்றுவட்டாரக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.