பாலக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. கவுனூர், கனபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளனர்.