இராமநாதபுரம்: மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமில் வீடுகள் சேதம்: புதிய வீடுகளை வழங்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கனமழையால் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. காயமடைந்த மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், புதிய வீடுகளை விரைவாக ஒப்படைக்கவும், தேங்கிய மழைநீரை அகற்றவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.