விளவங்கோடு: குழித்துறை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், ரயில் நிலையப் பெயர்களில் ஏற்பட்ட குழப்பத்தால் ரயிலில் இருந்து தவறி விழுந்து பிரபல புகைப்படக் கலைஞர் மோகனன் நாயர் உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.