நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் அதிரடி: 10 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்!
நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 10 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவான வீட்டு உரிமையாளரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.