பெரம்பலூர்: சட்டவிரோத மண் கடத்தல் விவகாரம் - திமுக பிரமுகர் கைது, காவல் நிலையத்தில் தள்ளுமுள்ளு
பெரம்பலூரில் கிராவல் மண் கடத்திய திமுக பிரமுகர் கே.சி.ஆர்.குமாரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் ஆதரவாளர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இறுதியில் நீதிபதி அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.