திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியான மேற்கு ஆரோக்கிய மாதா தெருவில் நாகலட்சுமி டிரஸ்ட் சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் மூலம் ரூபாய் 14.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் ரிபன் வெட்டி திறந்து வைத்தார்.