பண்ருட்டி: மேல்பட்டாம்பாக்கம்,கொஞ்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து பிடிபட்ட பாம்புகள்;வெயிலின் தாக்கத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக தகவல்
நெல்லிக்குப்பம் குணமங்கலம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி அடுத்துள்ள கொஞ்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்பு பிடி வீரர் உமர் அலி என்பவரால், பாம்புகள் பாதுகாப்பாக பிடித்து காப்புகாட்டில் விடுவிக்கப்பட்டது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்கு பாம்புகள் புகுவது அதிகரிக்க துவங்கியுள்ளது என்றும், வீட்டாருக்கு சுற்றுப்புறத் தூய்மை பற்றிய அறிவுரை மற்றும் பாம்புகள் நடமாட்டம் கண்டால் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் வன ஆர்வலர் உமர் அலி பொதுமக்களுக்கு வழங்கினார்