கெங்கவல்லி: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 82 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்ட போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 82,000 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்