நாமக்கல்: நாமக்கல்லில் காந்தி பிறந்தநாள்: காமராஜர், நேரு சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள நேரு மற்றும் காமராஜர் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், சித்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.