பாளையங்கோட்டை: தமிழக அரசுக்கு விரைவில் மூடு விழா: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்!
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வு மற்றும் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.