இராமேஸ்வரம்: ராமேஸ்வரம்: சுவர்களுக்கு இடையே சிக்கிய கர்ப்பிணிப் பசுமாடு மீட்பு
ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் பகுதியில் சுவர்களுக்கு இடையே சிக்கிய நிறைமாத கர்ப்பிணிப் பசுமாட்டை, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட பசுமாட்டிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சீரானது.