இராமநாதபுரம்: சொத்து தகராறு: சித்தப்பாவை அரிவாளால் வெட்ட முயன்ற தந்தை மகன் மீது வழக்கு!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அரிவாளால் வெட்ட முயன்ற தந்தை கார்மேகம் மற்றும் மகன் பாலா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.