பெரம்பலூர்: பெரம்பலூர் வெங்கலம் கிராமத்தில் 12 அடி உயர விநாயகர் சிலை வழிபாடு
பெரம்பலூர் மாவட்டம் வெங்கலம் கிராமத்தில் விநாயகா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 12 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழிபாடுகள் நடத்தி வரும் நிலையில், வரும் 16-ஆம் தேதி இந்த சிலை கல்லாற்றில் கரைக்கப்பட உள்ளது.