அம்பத்தூர்: விழுப்புரத்தில் 194 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 194 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விழுப்புரம் ரோஷணை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புருஷோத்தமன், மகேந்திரன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.