காட்பாடி: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உறவினர் போக்சோ சட்டத்தில் கைது!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உறவினரே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், 1098 உதவி எண் மூலம் வந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் ஹரி என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.