கோவை வடக்கு: கோவையில் அனுமதியின்றி இயங்கிய 5 ரிசார்ட்களுக்கு சீல்: மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
கோவை தடாகம் அருகே உரிய அனுமதியின்றி இயங்கி வந்த 5 ரிசார்ட்கள் மற்றும் உணவகங்களை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக மூடி சீல் வைத்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிகாரிகள் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.