திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: நூலகங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2500 புத்தகங்கள் திரும்பப் பெற உத்தரவு
கோவையில் நூலக புத்தக கொள்முதல் முறைகேடு புகாரையடுத்து, திண்டுக்கல் மாவட்ட நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட 2500 புத்தகங்களை திரும்பப் பெற பொது நூலக இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.