திருவாடனை: திருவாடானை கோவிலில் சுபமுகூர்த்த நாள்: கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் சுபமுகூர்த்த நாளான இன்று திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெற்றதால், கோவில் சுற்றுப்புற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை திருவாடானை காவல்துறையினர் சீரமைத்தனர்.