இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள், மஞ்சள் மற்றும் சுக்கு பறிமுதல்!
ராமநாதபுரம் வேதாளை மற்றும் புதுமடம் பகுதிகளில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 2 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள், 531 கிலோ சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.