கோவில்பட்டி: நீட் தேர்வுக்கு எதிராக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை சைக்கிள் பேரணி
நீட் தேர்வுக்கு எதிராக கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி நடைபெற்று வரும் சைக்கிள் பேரணி கோவில்பட்டியை வந்தடைந்தது. நகர்மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இப்பேரணி வரும் 16-ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.