பெரம்பலூர்: 5 நாள் வேலை கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் ஸ்டேட் வங்கி முன்பு, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சனிக்கிழமை, ஞாயிறு விடுமுறை மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் முழக்கமிட்டனர்.