திருச்சி: கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
திருச்சி கொள்ளிடம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஸ்ரீதர் என்கிற ஸ்ரீ ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.