கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பயங்கர கார் விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே கல்லூரணி பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், கசவன்குன்று கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம், சண்முகலட்சுமி ஆகிய தம்பதியினர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.