இராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் அமாவாசை வழிபாடு: அக்னி தீர்த்தத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஆவணி சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.