மதுரை கிழக்கு: பட்டாசு விபத்து: 6 நாட்களில் 1,464 பேருக்கு கண் பாதிப்பு - 8 பேருக்கு கண் அகற்றம்
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்ததில் 1,464 பேருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதில் 54 சதவீதம் பேர் குழந்தைகள். பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் 8 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.