ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் புதிய 'பிக்கப் பிளாசா' திறப்பு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய 'பிக்கப் பிளாசா'-வை மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு காணொலி மூலம் திறந்து வைத்தார். பயணிகளின் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இந்த புதிய வசதி அமைக்கப்பட்டுள்ளது.