திருவாடனை: திருவாடானை அருகே விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி பால்குட உற்சவம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாரதிநகரில் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பால்குட உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.