பாளையங்கோட்டை: சாலையில் கிடந்த 30 பவுன் நகை: முதியவரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலையில் கிடந்த 30 பவுன் நகை மற்றும் 5,000 ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவர் பாப்பையாவிற்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டுத் தெரிவித்து கௌரவித்தார்.