விளாத்திகுளம்: வேம்பார் பகுதி தடுப்பணையை தாண்டி மழை நீர் நிரம்பி கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை
மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மக்களுக்கு குடிநீரை உறுதிப்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வேம்பார் பகுதியில் உள்ள தடுப்பணையில் மழை நீர் நிரம்பி அது கடலில் நேரடியாக கலைக்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகள் மழை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.