திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் சொசைட்டி தெருவில் பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி
திண்டுக்கல் சொசைட்டி தெருவில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குழாய்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கிய நிலையில், லாரியில் இருந்த பொருட்களை மாற்றிய பிறகு வாகனம் மீட்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் லாரி சிக்கியது குறிப்பிடத்தக்கது.