திருநெல்வேலி: நெல்லை: குழந்தைகள் தின விழாவில் மாணவிகளுக்கு கேக் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நெல்லை டவுண் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த்மோகன் 4,000 மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் மாணவர்களுக்கு இந்த இனிப்புகள் வழங்கப்பட்டன.