அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில் தவறிய 74,000 ரூபாய் மதிப்புள்ள கைப்பையை மீட்ட RPF
அரியலூர் ரயில் நிலையத்தில் தவறவிடப்பட்ட 5 கிராம் தங்கம் மற்றும் 24,000 ரூபாய் ரொக்கம் இருந்த கைப்பையை ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) மீட்டுக் கொடுத்துள்ளனர். உரிய சரிபார்ப்புக்குப் பிறகு, கைப்பையின் உரிமையாளரான பாரதி என்பவரிடம் மாலை 5:30 மணியளவில் அது ஒப்படைக்கப்பட்டது.