திருப்பூர் தெற்கு: திருப்பூர்: வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டத்தில் திமுக, தவெக வெளிநடப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பல்லடம் பகுதியில் வாக்குச்சாவடி இணைப்பு குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.